ஒரு கும்கி உருவாகும் கதை - https://goo.gl/AmGS1f
ஒரு யானையைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த அதன் காவடி ``இதுதான் கிருஷ்ணமூர்த்தி” என்றார். இந்த யானையா 15 பேரைக் கொன்றது என்கிற அளவுக்கு அப்பாவியாய் குளித்துக்கொண்டிருந்தது.யானை அவர் சொல்லுக்கு ஏற்ப திரும்பித் திரும்பிப் படுத்து குளித்துக்கொண்டிருந்தது. முதுமலை ஈட்டிமர முகாமில் நான்கைந்து யானைகள் இருந்தும் எளிதாகக் கடந்து போக முடிந்தது. ஆனால் கிருஷ்ணமூர்த்தியை அப்படி எளிதாகக் கடந்து போக முடியவில்லை. மக்னா குறித்துக் கேள்விப்பட்டிருந்த கதைகள் எல்லாம் அதன் மீது ஒருவித பயத்தை ஏற்படுத்தியிருந்தது. கிருஷ்ணமூர்த்தி யானையைப் பக்கத்தில் பார்த்ததும் திக்கென்றுதான் இருந்தது.
Story of kumki elephants